Tuesday, February 8, 2011

பெரியார்

இவர்……
சூத்திரனாக்கப்பட்டவனை
சூரியனாக்கிய
சூத்திரதாரி.

ஆரியமாயையை
அடக்கி வைத்த
மந்திரவாதி.

மனுநீதிக்கு எதிராக
மனித நீதியை எழுதிய
மகாத்மா.

இவர் ஜெபிப்பதிற்கு பதிலாக
சபித்தார்
அடிமைச் சங்கிலி
அறுந்து விழுந்தது.

இவர் அசீர்வதித்தார்
வெங்காயத்திற்கும்
வெட்கம் வந்தது.

சிந்திப்பது மட்டுமல்ல……
கொடுமையை நிந்திப்பதும்
அநீதியை……
மனிதஉரிமையென்று நீதி சொல்லி
மானுடத்தின் எதிரிகளுக்கும்
தீய மதவாத ஆசாரங்களுக்கு
மரண தண்டனையளித்த
இருபதாம் நூற்றாண்டின்
விநோத ஈரோட்டுச் சாக்ரடீஸ்.

அவரின் வெண்தாடி
அகமூடித் திருடர்களின்
முகமூடிகளை வெட்டியெந்த
கோடரி

வர்ணாச்சிரம தரும
அக்கப்போருக்கெதிராக
வைக்கம்போர் நடத்திய
நிஜ நரசிம்ம அவதாரம்.

அடிமையாக்கப்பட்டவர்களின்
அறியாமையின் மன விலங்கை
தன்மானச் சம்மட்டியால் தகர்த்தெரிந்து
அவர்களின் இனமானத்தை.
விடுதலை செய்த
ஆசிய நாட்டு ஆபிரகாம் லிங்கன்.

No comments:

Post a Comment