எப்படியோ இருந்தவர்க ளெல்லாம் நாட்டில்
“யம்மாடியோவ்” எனத்திகைக்கும் வண்ணம் வாழ்வின்
உப்பரிகையில் நிற்கின்றார் ஆனால் நாமோ
உப்புமூட்டை சுமக்கின்றோம் கூலிக ளாக
தப்பென்று தெரிந்திருந்தும் தன்னலம் காக்க
தமிழினத்தின் உரிமைகளை தாரை வார்த்தோம்
ஒப்புக்கு சித்தப்பா வேடம் போட்டோம்
உலகறிய ஒட்டுமொத்த மாகக் கெட்டோம்.
No comments:
Post a Comment