மகளே…….ஓ …………என் மகளே……
என் தாயின் மறுபிறப்பே.
என் மரபணுவை தாங்கி நிற்கும்
என் மறுபிறப்பின் அன்னையே.
எனக்காகவே
என் வாழ்க்கையெனும்
வானில் உதித்த தேய்பிறையில்லாத
என் பௌர்ணமி நிலவே.
என் பிறப்பை பிரகாசப்படுத்திய
என் வெள்ளி நட்சத்திரமே.
நான் உயிருடன் இருக்கும்போதே
எனக்கு இன்னொரு பிறவி கொடுத்த
என் இரண்டாவது தாயே.
என் செல்லப் பெண்ணே……..
என் கண்களுக்கு ஒளிதந்த
என் கண்ணான கண்ணே.
No comments:
Post a Comment