Thursday, February 10, 2011

நண்டு

இருநூறு ஆண்டுகள் வரலாறாம் நமக்கு  - நாட்டில்
இருபது இலட்சம் இதுவரை கணக்கு
எருமைபோல் எதிர்கால இலக்கினில் பொறுப்புகாச
இருமலாய் நமக்குள்ளே எத்தனை பிணக்கு.

ஆயிரக் கணக்கான ஆலயங்கள் இங்கேஅவை
ஊட்டிய நன்னெறி ஒழுக்கங்கள் எங்கே!
கோவின் இல்லம் கேளிக்கைக் கூடமானதுஇனம்
கூனலாகி இந்த நாட்டில் ஊனமானது.

இனம்மொழி நலம்காக்க சங்கங்கள் கண்டோம்சாதி
சனம்குலம் கோத்திரம் அவற்றிலும் கொண்டோம்
குணம்தவிர பணம்பகட்டு அங்கேயும் உண்டுதனி
மனிதவழி பாட்டிற்கு துதிபாடும் தொண்டு.

வீழ்ச்சியுற்ற இனம்நிமிர கனல்தெறிக்கும் கூட்டங்கள்  அதன்
விரைவான மீட்சிக்கு தீர்வுகளாய் திட்டங்கள்
வாழ்க்கையின் தரம்உயர வரியோரின் வேட்டல்கள்வாரி
வழங்கியவர் வயிறெரிய காட்டுவதோ நட்டங்கள்.

நெடுஞ்சாலை நிறுத்தங்களில் பளிங்குக் கழிவறைகள்நாட்டில்
நெடிந்துயர்ந்த கோபுரங்களாய் வியாபாரக் கருவறைகள்
ஏழ்மையைத் தந்துஓய்ந்த தோட்டப்புறத் தொழிற்துறைகள்அங்கு
இனத்தைப்போல் பொலிவிழந்த வாரிசுகளின் வகுப்பறைகள்.

தேர்ந்தெடுத்து வைப்பதற்குமுன் தரத்தைப்பாருபின்
தேராதவன் என்றுணர்ந்தால் குறைகளைக் கூறு
தெரிந்திருந்தும் அறியாதவன்போல் இருந்தாய் இங்குஅதனால்
பறிபோன காக்கையின் வடையானது உன்பங்கு.

ஒற்றுமையே மற்றவரின் பலம்இந்த நாட்டில்நம்மின
ஊடல்களும் உரசல்களும் நாறுதுதினம் ஏட்டில்
மற்றவர்களின் மாண்புக்கு சான்றுகள் பலஉண்டுஇங்கு
நம்மினத்திற் குவமையோ காண்டா காட்டு நண்டு.

No comments:

Post a Comment