நண்டு
இருநூறு
ஆண்டுகள் வரலாறாம் நமக்கு - நாட்டில்
இருபது
இலட்சம் இதுவரை கணக்கு
எருமைபோல்
எதிர்கால இலக்கினில் பொறுப்பு – காச
இருமலாய்
நமக்குள்ளே எத்தனை பிணக்கு.
ஆயிரக்
கணக்கான ஆலயங்கள் இங்கே – அவை
ஊட்டிய
நன்னெறி ஒழுக்கங்கள் எங்கே!
கோவின்
இல்லம் கேளிக்கைக் கூடமானது – இனம்
கூனலாகி
இந்த நாட்டில் ஊனமானது.
இனம்மொழி
நலம்காக்க சங்கங்கள் கண்டோம் – சாதி
சனம்குலம்
கோத்திரம் அவற்றிலும் கொண்டோம்
குணம்தவிர
பணம்பகட்டு அங்கேயும் உண்டு – தனி
மனிதவழி
பாட்டிற்கு துதிபாடும் தொண்டு.
வீழ்ச்சியுற்ற
இனம்நிமிர கனல்தெறிக்கும் கூட்டங்கள் – அதன்
விரைவான
மீட்சிக்கு தீர்வுகளாய் திட்டங்கள்
வாழ்க்கையின்
தரம்உயர வரியோரின் வேட்டல்கள் – வாரி
வழங்கியவர்
வயிறெரிய காட்டுவதோ நட்டங்கள்.
நெடுஞ்சாலை
நிறுத்தங்களில் பளிங்குக் கழிவறைகள் – நாட்டில்
நெடிந்துயர்ந்த
கோபுரங்களாய் வியாபாரக் கருவறைகள்
ஏழ்மையைத்
தந்துஓய்ந்த தோட்டப்புறத் தொழிற்துறைகள் – அங்கு
இனத்தைப்போல்
பொலிவிழந்த வாரிசுகளின் வகுப்பறைகள்.
தேர்ந்தெடுத்து
வைப்பதற்குமுன் தரத்தைப்பாரு – பின்
தேராதவன்
என்றுணர்ந்தால் குறைகளைக் கூறு
தெரிந்திருந்தும்
அறியாதவன்போல் இருந்தாய் இங்கு – அதனால்
பறிபோன
காக்கையின் வடையானது உன்பங்கு.
ஒற்றுமையே
மற்றவரின் பலம்இந்த நாட்டில் – நம்மின
ஊடல்களும்
உரசல்களும் நாறுதுதினம் ஏட்டில்
மற்றவர்களின்
மாண்புக்கு சான்றுகள் பலஉண்டு – இங்கு
நம்மினத்திற்
குவமையோ காண்டா காட்டு நண்டு.
No comments:
Post a Comment